இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை ஊட்டியில் முகாமிட்டுள்ளது. அந்த படை வீரர்கள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் மீட்பு காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளித்து வருகின்றனர்.
கூடலூர் குனில்வயல் தடுப்பணை அருகே மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்.
மேலும் வெள்ள பாதிப்பு ஏற்படும் போது செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினர்.