திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தூய்மைப்பணி
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தூம்யைப்பணி நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மழை நீர் சேகரிப்பு தொட்டி சுத்திகரிப்பு பணியும், கல்லூரி வளாகம் சுத்தம் செய்யும் பணியும் நடந்தது. இந்த பணியினை கல்லூரி முதல்வர் சாம்ராஜ் பார்வையிட்டார். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் மற்றும் பேராசிரியர்களின் மேற்பார்வையில் 2&ம் ஆண்டு பி.பி.எட் மற்றும் எம்.பி.எட் மாணவ, மாணவிகள் செய்தனர்.