திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல் ஆகிய தாலுகாவில் உள்ள நிலம் இல்லாத தலித் மக்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வலியுறுத்தி திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் முன்பு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அரசூர் ராஜ்குமார், மீனவர் அணி மாநில துணை செயலாளர் மங்கை சேகர், செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து, மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் டிலைட்டா, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பஸ்நிலையத்தில் இருந்து உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு உதவி கலெக்டர் கோகிலாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.