திருவொற்றியூரில் அதிக பாரம் ஏற்றி வந்த 37 கன்டெய்னர் லாரிகளுக்கு ரூ.7 லட்சம் அபராதம்
திருவொற்றியூரில் அதிக பாரம் ஏற்றி வந்த 37 கன்டெய்னர் லாரிகளுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் ரூ.7 லட்சம் அபராதம் விதித்தனர்.;
திருவொற்றியூர்,
திருவொற்றியூர்-எண்ணூர் கடற்கரை விரைவு சாலை எல்லையம்மன் கோவில் அருகே நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை சென்னை பெருநகர போக்குவரத்து கமிஷனர் உத்தரவின்பேரில் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. சென்னை கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு, மத்திய பகுதி ஆகிய பகுதிகளை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஸ்ரீதர், வெங்கடேசன், ஸ்ரீதர், மாதவன், ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, ஞானவேல் ஆகியோர் தலைமையில் கனரக வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் இதர வாகனங்களை சோதனை செய்தனர்.
அப்போது அதிக அளவிலான பாரங்களை ஏற்றி வந்த 37 கன்டெய்னர் லாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்து, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.7 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தனர். மேலும் அபராதம் கட்டத்தவறிய வாகனங்கள், மஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு காலி இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.