ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தியவர் கைது

ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-24 09:20 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில், திருத்தணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நேற்று முன்தினம் காலை ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த ஒரு பஸ்சில் இருந்து வந்து இறங்கியவர் மீது சந்தேகம் ஏற்பட்டதும், உடனே போலீசார் அவரை மடக்கி திருத்தணி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

அப்போது அவர் கையில் வைத்திருந்த பையில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து இந்த கஞ்சாவை சென்னையில் விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் அவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 40) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்