ஓட்டல் தீப்பிடித்து எரிந்து நாசம்
கடையம் அருகே கீழஆம்பூரில் ஓட்டல் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
கடையம்:
கடையம் அருகே கீழஆம்பூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் மாரியப்பன். இவர் அதே பகுதியில் அம்பை &தென்காசி மெயின் ரோட்டில் ஓட்டல் வைத்துள்ளார். இந்த ஓட்டலை பொட்டல்புதூரை சேர்ந்த சாகுல் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். சாகுல் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஓட்டலை திறக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் ஓட்டலில் இருந்து புகை வந்துள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அம்பை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ஓட்டலில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.