டாஸ்மாக் பணியாளர் சங்க செயற்குழு கூட்டம்

நெல்லையில் டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2021-09-23 22:15 GMT
நெல்லை:
தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜா, பொருளாளர் அருள்மணி, துணை பொதுச்செயலாளர் புருசோத்தமன், அமைப்பு செயலாளர் இன்னாசிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் வரவேற்று பேசினார். 

கூட்டத்தில், தொகுப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய டாஸ்மார்க் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து மாநில தலைவர் பாலுசாமி கூறியதாவது:-
குறைந்த தொகுப்பூதியத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடை அருகே பார் அமைக்கக்கூடாது. அப்படி அமைப்பதால் பணியாளர்களுக்கு அந்த பார் உரிமையாளரின் நெருக்கடி அதிகமாக உள்ளது. தற்போது சட்டவிரோதமாக அதிக அளவில் பார் செயல்படுகிறது. இதை அரசு கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசியல் கட்சியினர் தலையீடு அதிகளவில் உள்ளது. பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நிர்வாகத்தை சீரமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிர்வாக புனரமைப்பு குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்