வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருக்குறுங்குடியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-09-23 22:08 GMT
ஏர்வாடி:
களக்காடு யூனியனில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 9&ந்தேதி நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள், திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 12-ந்தேதி எண்ணப்படுகிறது. இதையடுத்து அந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, தாசில்தார் இசக்கிபாண்டி, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் முருகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.





மேலும் செய்திகள்