மனைவியை அடித்ததால் வேதனை: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மனைவியை அடித்ததால் வேதனை: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி ஊராட்சி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பாப்பா (42). இவர் தனது கணவரிடம் ரூ.1,000 சீட்டு கட்ட கேட்டதாக தெரிகிறது. அதற்கு சேகர் பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாப்பா கணவருக்கு தெரியாமல் ரூ.1,000&ஐ எடுத்து சீட்டு பணம் கட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் சேகருக்கு தெரியவே அவர் மனைவி பாப்பாவை அடித்து விட்டார். இதற்கிடையே மனைவியை அடித்து விட்டோமே என்று மன உளைச்சலில் இருந்த சேகர், சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாப்பா மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சேகரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
========