தாந்தோணிமலை, வெள்ளியணை உள்பட 5 துணை மின்நிலைய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
தாந்தோணிமலை, வெள்ளியணை உள்பட 5 துணை மின்நிலைய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கரூர்
மின்சாரம் நிறுத்தம்
கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட மண்மங்கலம், வெள்ளியணை, தாந்தோணிமலை, ஒத்தக்கடை, பாலம்மாள்புரம், குப்புச்சிபாளையம் உள்பட 6 துணை மின்நிலைய பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதன் விவரம் பின்வருமாறு:-
மண்மங்கலம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசுகாலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூர், கடம்பன்குறிச்சி, வள்ளியம் பாளையம், வடுகப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
வெள்ளியணை துணை மின்நிலையத்திற்குட்பட்ட வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, காளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரபட்டி, முஸ்கிணத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.
தாந்தோணிமலை-ஒத்தக்கடை
தாந்தோணிமலை துணை மின்நிலையத்திற்குட்பட்ட தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாழபட்டி, கன்னிமார் பாளையம், பசுபதிபளையம், ஏமூர், மின்நகர், ஆட்சியமங்கலம், ராயனூர், கவுரவப்பட்டி, பாகநத்தம், செல்லாண்டிப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது
ஒத்தக்கடை துணை மின்நிலையத்திற்குட்பட்ட ஒத்தக்கடை, சோமூர், ரங்கநாதன் பேட்டை, செல்லிபாளையம், நெருர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சி பாளையம், பெரிய காளிபாளையம், சின்ன காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று மின்வினியோகம் இருக்காது.
பாலம்பாள்புரம்-குப்புச்சிபாளையம்
பாலம்மாள்புரம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பாலம்மாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோவில் தெரு, கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில், அனுமந்தராயன் கோவில், புதுதெரு, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.
குப்பிச்சிபாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பன் பாளையம், குடுகுடு தான் ஊர், குப்புச்சிபாளையம், தண்ணீர்பந்தல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று மின்வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.