போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு
போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு
மதுரை
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. அன்பு உத்தரவின் பேரில் காவல்துறை அதிகாரிகளுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பான பயிற்சி வகுப்பு நடந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். தென்மண்டலத்தில் உள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காவல் உயர் அதிகாரிகளுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது. மும்பையைச் சேர்ந்த கேதான் கம்யூட்டர் நிறுனத்தின் இணை நிறுவனர் மனோஜ் துபே மூலம் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் செல்போன் தொடர்புகள், விவரங்களை ஆராய்தல், குற்றங்களை ஆராய்ந்து தொலை தொடர்பு விவரங்களுடன் பொருத்துதல், வங்கிப் பரிவர்த்தனை மற்றும் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றும் மோசடி குற்றங்களை ஆராய்தல், ஆன்டிராய்டு செல்போன்கள் மூலம் துரிதமாக சைபர் குற்றங்களை பற்றிய விவரங்களை சேகரித்தல் மற்றும் சைபர் கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக விரிவான பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது.