ரூ.4.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

பேரளம் அருகே ரூ.4.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-09-23 18:59 GMT
நன்னிலம்:
பேரளம் அருகே ரூ.4.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன சோதனை
திருவாரூர் மாவட்டம் பேரளம் ரெயில்வே கேட் அருகே நேற்று மாலை பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில்  மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. 
இதையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நீடாமங்கலத்தில் இருந்து கொல்லுமாங்குடிக்கு புகையிலை பொருட்களை கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
ரூ.4.50 லட்சம் புகையிலை பொருட்கள்
இதை தொடர்ந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 612 கிலோ புகையிலை பொருட்களையும், சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரிடம் புகையிலை பொருட்களை கடத்தலில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளது என்பது குறித்தும்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்