மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2021-09-23 17:51 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் உள்ளது. 

இந்த அலுவலகத்தில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை என 2 நாட்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நேற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில், மாற்றுத்திறனாளிகள் புதிய அடையாள அட்டை பெறவும், புதுப்பிக்கவும் விண்ணப்பித்தனர்.

மேலும் அவர்களுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மூலம் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 

முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மேலும் செய்திகள்