கார் மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவு

காரியாபட்டி அருகே கார் மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இறந்தார்.

Update: 2021-09-23 17:24 GMT

காரியாபட்டி, 


நரிக்குடி அருகே எழுவனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60).முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் தனது ஊரிலிருந்து காரியாபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் எழுவனி செல்ல தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார், அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்