போக்சோவில் 2 பேர் கைது

போக்சோவில் 2 பேர் கைது

Update: 2021-09-23 16:44 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இந்த சிறுமி அருகில் உள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தங்கும் விடுதி ஊழியரான சின்னகுப்புசாமி(வயது 37) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, சின்னகுப்புசாமியை கைது செய்தனர்.

இதேபோன்று ஆனைமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை சேத்துமடை அண்ணா நகரை சேர்ந்த சுரேஷ்(28) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாகவும், திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்