தூத்துக்குடியில் பரவலாக மழை

தூத்துக்குடியில் நேற்று பரவலாக மழை பெய்தது.

Update: 2021-09-23 16:27 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று பரவலாக மழை பெய்தது.

பரவலாக மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லவே மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. 

மதியத்துக்கு பிறகு வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. அவ்வப்போது லேசான காற்று வீசியது. மாலை 5 மணி அளவில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த மழையால் தூத்துக்குடி மாநகரம் குளிர்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

அதே நேரத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காக பல இடங்களில் தோண்டப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணித்தனர்.

மேலும் செய்திகள்