கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

காலாப்பட்டில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-23 16:22 GMT
காலாப்பட்டு, செப்.
காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனை அருகே கஞ்சா புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் சாதாரண உடையில் கண்காணித்தனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் பெரியகாலாப்பட்டு பாரதியார் நகரை சேர்ந்த செல்வா (வயது 26), நயினார்மண்டபம் கிழக்கு மெயின்ரோட்டை சேர்ந்த ரகுமான்கான் (21) என்பதும், கஞ்சாவை  விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 315 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காலாப்பட்டில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்