புதுச்சேரியில் புதிதாக 91 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் 91 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி, செப்
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 132 பேர், வீடுகளில் 837 பேர் என 969 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 67 பேர் குணமடைந்தனர். நேற்றைய தினம் புதியதாக உயிரிழப்பு ஏதுமில்லை. நேற்று முன்தினம் முதல்கட்ட தடுப்பூசியை 3 ஆயிரத்து 108 பேரும், 2&வது கட்ட தடுப்பூசியை 6 ஆயிரத்து 385 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 6 லட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் முதல்கட்ட தடுப்பூசியையும், 2 லட்சத்து 70 ஆயிரத்து 690 பேர் 2&வது கட்ட தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.77 சதவீதமாகவும், தொற்று பாதிப்பு 1.55 சதவீதமாகவும் உள்ளது.