ரத்தசோகை விழிப்புணர்வு முகாம்

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

Update: 2021-09-23 12:21 GMT
திருப்பூர்,

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக ஊட்டச்சத்து மாதவிழாவையொட்டி, ஊட்டச்சத்து உணவு மற்றும் ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதற்கு மாவட்ட திட்ட அலுவலர் மரகதம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் 100 மாணவிகளுக்கு ரத்தசோகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுபோல் ரத்தசோகையின் அறிகுறிகள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு ரத்தத்தில் பெண்கள் குழந்தைகள் கர்ப்பிணிகளுக்கு இருக்க வேண்டிய அளவு மற்றும் குறைவாக இருந்தால் ஏற்படும் விளைவுகள் அதனை அதிகரிக்க சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வசந்தி பிரேமா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயலதா, மேற்பார்வையாளர் பத்மாவதி உள்பட பலர் கலந்துகொண்டுபேசினர். இந்த பரிசோதனையில் ரத்த சோகை இருக்கிற மாணவிகள் கண்டறியப்பட்டு, அதனை நிவர்த்தி செய்வது குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்