ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் மீது தாக்குதல் - முக்கிய குற்றவாளிகளை பிடிக்க கோரி பெற்றோர் சாலை மறியல்
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை தாக்கிய முக்கிய குற்றவாளிகளை பிடிக்க கோரி பெற்றோர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
மதுரவாயல் பகுதியை சேர்ந்த 9 வயதான 4-ம் வகுப்பு மாணவன், மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தான். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததும், அதற்கு மாணவன் மறுத்ததால் அவனது தலையில் கல்லால் தாக்கியதும் தெரிந்தது. தற்போது மாணவன், அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இது தொடர்பாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்ட இருப்பதாகவும், முக்கிய குற்றவாளிகளான அவர்களை போலீசார் பிடிக்க மறுத்து வருவதாகவும் கூறி பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் நேற்று மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்ததால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.