வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் பெண் வருவாய் ஆய்வாளரின் செல்போன் திருட்டு

வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் பெண் வருவாய் ஆய்வாளரின் செல்போனை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-09-23 10:31 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் பர்வீன் (வயது 35). வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் அலுவலகத்தில் தனது இருக்கையில் உட்கார்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார். இவரது டேபிள் மீது வைக்கப்பட்டு இருந்த செல்போன் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய் ஆய்வாளர் உடனடியாக தாசில்தார் ஆறுமுகத்திடம் தனது செல்போனை காணவில்லை என்று புகார் தெரிவித்தார்.

உடனே தாசில்தார் தாலுகா அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது ஒரு மர்ம நபர் ஒருவர் பர்வீன் டேபிளில் இருந்த செல்போனை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக ஓட்டேரி போலீசார் செல்போனை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்