ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2021-09-22 21:25 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
27 பதவிகள்
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கும், 2 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கும், 4 ஊராட்சி தலைவர் பதவிக்கும், 20 ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கும் என மொத்தம் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 15-ந்தேதி முதல் நேற்று வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
அதன்படி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வார்டு எண் 5-க்கு 12 பேரும், ஈரோடு ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 4-க்கு 7 பேரும், பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 10-க்கு 15 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சென்னிமலை ஒன்றியம் முகாசிபுலவன்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு 5 பேரும், அந்தியூர் ஒன்றியம் சங்கராபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு 5 பேரும், நம்பியூர் ஒன்றியம் கூடக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு 8 பேரும், பெருந்துறை ஒன்றியம் கருக்குபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு 6 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
106 பேர் வேட்புமனு 
ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்காக, கொடுமுடி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சி வார்டு எண் 6-க்கு ஒருவரும், கொளத்துப்பாளையம் ஊராட்சி வார்டு எண் 6-க்கு ஒருவரும், அம்மாபேட்டை ஒன்றியம் முகாசிபுதூர் ஊராட்சி வார்டு எண் 2-க்கு 2 பேரும், சிங்கம்பேட்டை ஊராட்சி வார்டு எண் 5-க்கு 3 பேரும், மாணிக்கம்பாளையம் ஊராட்சி வார்டு எண் 6-க்கு ஒருவரும், பூதப்பாடி ஊராட்சி வார்டு எண் 4-க்கு 2 பேரும், பவானி ஒன்றியம் ஆண்டிகுளம் ஊராட்சி வார்டு எண் 3-க்கு 3 பேரும், ஓடத்துறை ஊராட்சி வார்டு எண் 7-க்கு 2 பேரும், சின்னபுலியூர் ஊராட்சி வார்டு எண் 1-க்கு 2 பேரும், ஒரிச்சேரி ஊராட்சி வார்டு எண் 9-க்கு 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
பவானிசாகர் ஒன்றியம் புங்கர் ஊராட்சி வார்டு எண் 1-க்கு 2 பேரும், நல்லூர் ஊராட்சி வார்டு எண் 1-க்கு 3 பேரும், டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி வார்டு எண் 2-க்கு 4 பேரும், வார்டு எண் 8-க்கு 4 பேரும், மொடக்குறிச்சி ஒன்றியம் துய்யம்பூந்துறை ஊராட்சி வார்டு எண் 7-க்கு 2 பேரும், முகாசிஅனுமன்பள்ளி ஊராட்சி வார்டு எண் 4-க்கு 2 பேரும், குளூர் ஊராட்சி வார்டு எண் 2-க்கு ஒருவரும், பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி வார்டு எண் 11-க்கு 5 பேரும், நம்பியூர் ஒன்றியம் கூடக்கரை ஊராட்சி   வார்டு எண் 6-க்கு 2 பேரும், அந்தியூர் ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சி வார்டு எண் 15-க்கு 3 பேரும் என மொத்தம் 27 பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) வேட்பு மனு பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுவை நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வருகிற அக்டோபர் மாதம் 9&ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவும், 12&ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.

மேலும் செய்திகள்