கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

பாவூர்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.

Update: 2021-09-22 21:22 GMT
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைஒளிவு. இவருடைய மகன் சுரேஷ் (வயது 22). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று மாலையில் ஊரின் நடுவில் அமைந்துள்ள ஊர் பொதுக்கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து அவர் பலியானார். இதுகுறித்து தென்காசி, சுரண்டை, ஆலங்குளம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஊர் பொதுக்கிணறு ஊரின் மையப் பகுதியில் உள்ளது. இதன் அருகே சாலை செல்கிறது. மேலும் சிறுவர், சிறுமிகள் அந்த பகுதியில் விளையாட வருகின்றனர். எனவே மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் இந்த கிணற்றிற்கு மூடி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்