பவானியில் காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

பவானி காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-09-22 20:55 GMT
பவானி
பவானி காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார். 
ஆற்றில் குதித்த மூதாட்டி
பவானி கூடுதுறை அருகே உள்ள அய்யப்ப சேவா காவிரி ஆற்று படித்துறை அருகே நேற்று சுமார் 70 வயதான மூதாட்டி ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். மதியம் 3 மணி அளவில் திடீரென அவர் ஆற்றில் குதித்துவிட்டார். 
அவர் தண்ணீரில் மூழ்குவதை பார்த்து, அக்கம் பக்கத்தில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள் நீந்திச்சென்று அவரை மீட்டு கரைக்கு கொண்டுவந்தார்கள். 
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். 
யார் அவர்?
அதன்பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்துவிட்டார்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்ற எந்த விவரமும் தெரியவில்லை. 
இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் மூதாட்டியின் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்