போலீஸ் அலுவலகம் அருகில் புதர்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதராக கிடக்கிறது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இங்கு இருந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அந்த பகுதி திறந்தவெளியாக உள்ளது. தற்போது இந்த பகுதி முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதராக கிடக்கிறது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் குவியும் குப்பைகளையும் இங்கு கொட்டுகிறார்கள். இதனால் போலீஸ் அலுவலகம் குப்பை மற்றும் புதருக்குள் சிக்கியது போன்று காட்சி அளிக்கிறது. இந்த பகுதியை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரேசன், ஈரோடு.