வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ராதாபுரம் அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே உள்ள காரியாகுளத்தை சேர்ந்தவர் ராஜன் மகன் கண்ணன் (வயது 21). இவர் மீது ராதாபுரம், திசையன்விளை போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் கண்ணனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இதை ஏற்று, கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான ஆவணங்களை போலீசார் சிறையில் ஒப்படைத்தனர்.