தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

Update: 2021-09-22 19:57 GMT
சேலம், செப்.23-
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கருணைநகர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2018&ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21&ந் தேதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு அழைத்து சென்றார்.
பின்னர் அங்கு தனபால் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார், ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தனபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
20 ஆண்டுகள் சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. விசாரணை நிறைவுபெற்ற நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக தனபாலுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.
========

மேலும் செய்திகள்