அதிகாரி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

ஆண்டிமடம் அருகே, தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2021-09-22 19:42 GMT
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தென்னூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டிற்கு வனத்தையன் (60) என்பவர் காவலாளியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு வனத்தையன் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் நேற்று காலை வனதையன் பணிக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெங்களூருவில் உள்ள ஜெயராஜிக்கு தகவல் தெரிவித்தார். அவர் அங்கிருந்து விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீசில் ஜெயராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.


மேலும் செய்திகள்