ஆட்டோ டிரைவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு
கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அனுமதியின்றி இயக்கப்படும் தனியார் மினிபஸ்கள் குறித்து நடவடிக்கைக்கோரி ஆட்டோ டிரைவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கரூர்
ஆட்டோ டிரைவர்கள்
கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அக்னி சிறகுகள் என்ற சங்கத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் நேற்று கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு விதிமுறைப்படியும், நெறிமுறைகளை கடைபிடித்தும் ஒற்றுமையுடன் 30&க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ஓட்டி நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம்.
மேலும் அரசு சார்பில் 2 மினி பஸ்களும் முறைப்படி இயக்கப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கின்றன. ஆனால் எந்த அனுமதியில்லாமல் கடந்த 1Ñ ஆண்டுகளாக தனியார் மினி பஸ்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் 15 நிமிடம் காத்திருந்து பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து தனியார் பஸ் டிரைவர்களிடம் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் அனுமதி உண்டு எனக்கூறுகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் பஸ்களை நிறுத்தியும், காற்று ஒலிப்பான்களை அதிக சத்தத்துடன் அடித்தும் இடையூறு செய்கின்றனர்.
இதனால் மருத்துவமனையை நம்பி ஆட்டோ ஓட்டி வரும் டிரைவர்கள் மற்றும் எங்களது குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் பாதிக்கப்படுகிறோம். எனவே தனியார் மினி பஸ்கள் முறையான அனுமதி பெற்று இயக்கப்படுகிதா? என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.