கருவேலமரங்கள் வெட்டி அகற்றப்படுமா?

கருவேலமரங்கள் வெட்டி அகற்றப்படுமா

Update: 2021-09-22 18:50 GMT
லமரங்கள் வெட்டி அகற்றப்படுமா 
வேதா-ரண்-யம் அருகே  உள்ள தோப்-புத்-து-றை-யில் இருந்து பனை-யன் காடு செல்-லும் சாலை-யின் இரு-பு-ற-மும் கரு-வேல மரங்கள் அடர்ந்து வளர்ந்-துள்-ளன. இத-னால் வாகன ஓட்-டி-கள் பெரி-தும் சிர-மப்-ப-டு-கின்-ற-னர். இந்த சாலை பயன்-ப-டுத்த முடி-யா-த-படி முட்-செ-டி-கள் வளர்ந்து உள்-ள-தால் வாக-னத்-தில் செல்-வோ-ரும் நடந்து செல்-வோ-ரும் பெரி-தும் பாதிக்கப்-ப-டு-கி-றார்கள். எனவே சம்-மந்-தப்-பட்ட துறை அதி-கா-ரி-கள் உட-னடி நட-வ-டிக்-கை-யாக இரு-பு-ற-மும் அடர்ந்து வளர்ந்-துள்ள கரு-வேல மரங்களை வெட்டி அகற்ற நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும் என அப்-ப-குதி மக்கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர்.

புதிய பாலம் கட்டித்தர வேண்டும்
திரு-வா-ரூர் மாவட்-டம் நன்-னி-லம் வட்-டம் திரு-வாஞ்-சி-யம் கிரா-மத்-தில் பல ஆண்-டு-க-ளாக பாலம் பழு-த-டைந்து உள்-ளது. இந்த பாலத்-தின் வழி-யாக அனைத்து கன-ரக வாக-னங்க-ளும் சென்று வரு-கின்-றன. மேலும் இந்த பாலத்-தின் வழி-யாக அனைத்து ஊர்-களுக்கு செல்ல வேண்டி உள்-ளது. எனவே பொது-மக்கள் நலன் கருதி புதிய பாலம் கட்டி தர-வேண்-டும்.
யூசுப், திரு-வாஞ்-சி-யம், நன்-னி-லம்.

குப்பைமேடு அகற்றப்படுமா
திரு-வா-ரூர் மாவட்-டம் வலங்-கை-மான் கடைத்-தெ-ரு-வில் உள்ள உழ-வர் சந்தை மற்-றும் பேரூ-ராட்சி அலு-வ-ல-கம் பாதை-யில் பல மாதங்க-ளாக குப்-பை-கள் தேங்கி மலை-போல் குவிந்து கிடக்கின்-றது. இத-னால் அந்த பகு-தி-யில் துர்-நாற்-றம் வீசு-கி-றது. தொற்று நோய் பர-வும் அபா-யம் ஏற்-பட்டு உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் குப்பை மேட்டை அகற்ற நட-வ-டிக்கை 
எடுப்-பார்களா?
 ந.கோவிந்-த-ரா-ஜன், வலங்-கை-மான்.

புகையிலை  பொருட்கள் விற்பனை தடை செய்யப்படுமா
மயி-லா-டு-துறை நக-ரம் மற்-றும் அதன் சுற்று வட்-டார பகுதி ஊர்-களில்  புகை-யிலை பொருட்கள் ரக-சிய-மாக விற்-கப்-ப-டு-வ-தாக தெரி-ய-வ-ரு-கி-றது. அரசு தீவிர சோத-னை-யில் பல நக-ரங்க-ளில் இந்த பொருட்கள் பறி-மு-தல் செய்-யப்-ப-டு-கின்-றன. இருப்-பி-னும் மயி-லா-டு-துறை பகு-தி-யில் புகை-யிலை பொருட்கள் விற்-பனை தொடர்-கி-றது.  எனவே மயி-லா-டு-துறை பகு-தி-களில் சம்-பந்-தப்-பட்ட அரசு துறை அதி-கா-ரி-கள் அதி-ரடி சோதனை செய்து, உட-ன-டி-யாக நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
பொது-மக்கள், மயி-லா-டு-துறை.

குப்பைகளை அகற்ற வேண்டும்
மன்-னார்-குடி அரசு மருத்-து-வ-ம-னைக்கு எதி-ரில் உள்ள செங்-கு-ளத்-தில் கடந்த ஒரு மாதத்-திற்கு முன்பு தூய்மை செய்-யும் பணியை மேற்-கொண்-ட-னர். அப்-போது சுத்-தம் செய்த போது விட்டு சென்ற மரம், செடி-கள் அதே இடத்-தில் ஒரு மாத கால-மாக கிடக்கி-றது. இத-னால் செடி, கொடி-கள் அழுகி அந்த பகு-தி-யில் துர்-நாற்-றம் வீசு-கி-றது. இத-னால் சுகா-தார சீர்-கேடு ஏற்-ப-டும் நிலை உரு-வாகி உள்-ளது. எனவே விரை-வில் அந்த மரம், செடி, கொடி-களை அகற்றி சுத்-தம் செய்ய கேட்டு கொள்-கி-றோம்.
பொது-மக்கள், மன்-னார்-குடி.

கழிவுநீர் அகற்றப்படுமா
மயி-லா-டு-துறை மாவட்-டம் குத்-தா-லம் சாலை-யில் மக-ளிர் பள்ளி உள்-ளது. அதன் அருகே கழி-வு-நீர் சாலை-யில் தேங்கிக் கிடக்கி-றது. இத-னால் அந்த பகு-தி-யில் துர்-நாற்-றம் வீசு-வ-தால்  மாண-வி-களும் பெற்-றோர்க-ளும் பெரி-தும் பாதிக்கப்-ப-டு-கின்-ற-னர். இத-னால் தொற்று நோய் பர-வும் அபா-யம் உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட துறை அதி-கா-ரி-கள் பள்ளி அருகே தேங்கி நிற்-கும் கழி-வு-நீரை அகற்ற உரிய நட-வ-டிக்கை எடுக்க வேண்-டும்.
குத்-தா-லம் பகுதி மக்கள்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திரு-வா-ரூர் மாவட்-டம், நீடா-மங்க-லம் தாலுகா, நீடா-மங்க-லம் பேரூ-ராட்சி காம-ரா-ஜர் தெரு-வில் தெருக்கு-ழாய் உடைந்து விட்-ட-தால் தண்-ணீர் வீணா-கி-றது. சம்-பந்-தப்-பட்ட பேரூ-ராட்சி அதி-கா-ரியை நேரில் பார்த்து கூறி-யும், மனு கொடுத்-தும் எந்த நட-வ-டிக்-கை-யும் எடுக்க-வில்லை. குடி-நீர் வீணாகி  அந்த குறு-கிய சாலை சேறும், சக-தி-யு-மாக காட்சி அளிக்கி-றது. எனவே 
சம்-பந்-தப்-பட்-ட-வர்-கள் உடைந்த குடி-நீர் குழாயை சரி செய்ய வேண்-டும்.
பொது-மக்கள், காம-ரா-ஜர் காலனி.

மேலும் செய்திகள்