திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலையில் டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்வது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்வது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சியில் ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்வது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
திருவண்ணாமலை தலைநகர் என்பது ஆன்மிக பூமி. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆன்மிக மக்கள் வருகின்றனர். நாளுக்கு நாள் ஆன்மிக மக்கள் வந்து போகின்ற எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கின்றது. 15 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட மத்திய பஸ் நிலையம் தற்போது போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை. அதனால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய பஸ் நிலையம் வேண்டும் என்று முதல்& அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. விவசாயத் துறைக்கு சொந்தமான டான்காப் நிறுவனத்திற்கு சுமார் 6 ஏக்கர் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்னாள் செயல்பட்டு வந்த டான்காப் நிறுவனத்தில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் வித்து தொழிற்சாலை ஒன்று நடைபெற்றது.
காலப்போக்கில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் அந்த தொழிற்சாலையை மூடிவிட்டார்கள். எனவே இந்த இடம் இருப்பதை முதல்& அமைச்சரிடம் சுட்டிக் காண்பித்தபோது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை அழைத்து பேசி இந்த இடத்தினை திருவண்ணாமலை நகராட்சி பஸ் நிலையத்திற்கு ஒதுக்கலாம் என முடிவு செய்யப்பட்டு தேர்வு செய்திருக்கிறோம்.
புதிய பஸ் நிலையம்
"இதை ஒட்டியிருக்கின்ற அரசுக்கு சொந்தமான வருவாய்த்துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் இடம் இருக்கிறது. ஆகவே மொத்தம் 10 ஏக்கர் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைய வேண்டும் என்று அரசு கருதுகிறது. எனவே கலெக்டரை மூலம் இந்த இடத்தினை தேர்வு செய்வதன் மூலமாக அங்குள்ள பிரச்சனைகள் என்னவென்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.
ஏற்கனவே டான்காப் நிறுவனத்தில் உள்ள துருப்பிடித்துள்ள எந்திரங்களை சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அலுவலர்கள் அமைச்சரின் அனுமதி பெற்று அவைகளையெல்லாம் புதிய இடத்திற்கு கொண்டு விற்பனை செய்ய வேண்டும். அதற்கு பின்னர் தான் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், முதல்& அமைச்சர் சந்தித்து நிதி வரப்பெற்ற பின்னர் தான் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பஸ் நிலையம் அமைக்கப்படுவது குறித்து முதல்-அமைச்சர் மிகவும் முனைப்போடு தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய பஸ் நிலையம் கொண்டு வருவதற்கான முழு முயற்சிகள் அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, உதவி கலெக்டர் (திருவண்ணாமலை) வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர் சந்திரா, கண்காணிப்பு பொறியாளர் (பொதுப்பணித்துறை) பழனிவேல், கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை) முரளி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை
மேலும் ஆய்வுப் பணிக்கு வந்த அமைச்சரிடம் டான்காப் நிறுவனத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நாங்கள் இங்கு 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். புதிய பஸ்நிலையம் அமைக்கும்போது தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு எந்த வித பாதிப்பு வராமல் தொடர்ந்து நாங்கள் இங்கேயே வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
=============
படம்&1 பைல் நேம் : 6387241