காரைக்குடி,
சாக்கோட்டை போலீஸ் சரகத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது தந்தை குடிபோதையில் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமி தாயிடம் கூறியுள்ளார். அவரது தாய் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.