பொள்ளாச்சி ஆனைமலையில் 14 பேர் வேட்புமனு தாக்கல்
பொள்ளாச்சி ஆனைமலையில் 14 பேர் வேட்புமனு தாக்கல்
பொள்ளாச்சி
போளிகவுண்டன்பாளையத்தில் ஊராட்சி உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதுபோன்று பொள்ளாச்சி, ஆனைமலையில் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இடைத்தேர்தல்
பொள்ளாச்சி அருகே உள்ள தென்குமாரபாளையம், திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், வடக்கு ஒன்றியத்தில் போளிகவுண்டன்பாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினருக்கும், ஜமீன்முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வருகிற 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, நிறைவடைந்தது.
தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 4 பேரும், திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். ஜமீன்முத்தூர் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
பரிசீலனை
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி உறுப்பினர்களுக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வியாழக்கிழமை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், சனிக்கிழமை மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும்.
அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கிடையில் போளிகவுண்டன்பாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சரஸ்வதி (வயது 51) என்பவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இதன் காரணமாக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.