திருப்புவனம்,
திருப்புவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகமாக வெயில் அடித்து வந்தது. நேற்று மாலை 6 மணிக்குமேல் சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கிராமப்பகுதிகள், சாலைகள், வயல்வெளி பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் இந்த பலத்த மழையால் குடிநீர் கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. நெடுஞ்சாலைகளில் தண்ணீர் அதிகமாக தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. நேற்றுமாலை பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமை சூழ்ந்தது.