கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3773 உள்ளாட்சி பதவிகளுக்கு 13878 பேர் வேட்பு மனு தாக்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3773 உள்ளாட்சி பதவிகளுக்கு 13878 பேர் வேட்பு மனு தாக்கல்;
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 180 ஒன்றிய வார்டு உறுப்பினர், 412 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 3,162 ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 3,773 பதவிகளுக்கு உதேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. கடந்த 6 நாட்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 63 பேர், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 571 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,600 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,875 பேர் என மொத்தம் 9,129 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று கடைசிநாள் என்பதால் ஏராளமானோர் மினி லாரி, வேன், டிராக்டர் போன்ற வாகனங்களில் மகிழ்ச்சி ஆரவாரம்செய்தபடி வேட்பு மனுதாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 104 பேர், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 638 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 656 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,351 பேர் என மொத்தம் 4 749 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். மாவட்டத்தில் இதுவரை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 167 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,209 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2,256 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 10,256 பேர் என மொத்தம் 13,878 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.