கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை
கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
சாயல்குடி,
சாயல்குடி துரைச்சாமிபுரம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் பூஜை முடிந்து பூசாரி கோவிலை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று வழக்கம்போல் கோவிலை திறந்து பார்த்தபோது சாமி சிலை முன் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் உடைந்த நிலையில் கிடந்துள்ளது. இதில் இருந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்னேசுவரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.