திருக்கோவிலூர் அருகே சந்தன கட்டைகள் கடத்தல் வாலிபர் கைது

திருக்கோவிலூர் அருகே சந்தன கட்டைகள் கடத்தல் வாலிபர் கைது தனியார் பஸ்சில் வந்தபோது பறக்கும் படையினர் பிடித்தனர்

Update: 2021-09-22 17:38 GMT
திருக்கோவிலூர்

முகையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்வாலை கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற தனியார் பஸ்சை வழிமறித்து பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பஸ்ஸில் சந்தேகத்திற்கிடமான வகையில் அமர்ந்திருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள புலியனூர் சிந்தாதிரிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்ன பையன் மகன் குமார்(வயது 34) என்பவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 15 கிலோ எடையுள்ள சந்தன கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். 

பின்னர் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெய்சங்கர் மூலம் பறிமுதல் செய்த சந்தன கட்டைகளையும், அதை கடத்தி வந்த குமாரையும் வனத்துறை அதிகாரிகளிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து சந்தன கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்