அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-09-22 16:40 GMT
ஆண்டிப்பட்டி:

தமிழ் மாநில தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். நிறுவனத்தலைவர் சங்கிலி கண்டன உரையாற்றினார். 

மாநில அமைப்பு செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் குமரேசன் வரவேற்றார். 

தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டில் கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

 மருத்துவமனைக்கு வருகிற பெண்களை, தகாத வார்த்தையால் பேசுகிற தனியார் நிறுவன ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்