இடையகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் பலி
இடையகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் பலியானார்.;
வேடசந்தூர்:
இடையகோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 27). கொத்தனார். இவர் கடந்த 19&ந்தேதி கட்டிட வேலைக்காக திண்டுக்கல் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து இடையகோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தாடிக்கொம்பு-இடையகோட்டை சாலையில் சாலையூர் நால்ரோடு அருகே அவர் வந்தபோது, தங்கபாண்டி நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கபாண்டி நேற்று இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.