பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் காங்கேயம் நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை

பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் காங்கேயம் நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர்.

Update: 2021-09-22 11:43 GMT

திருப்பூர்
பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் காங்கேயம் நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர்.
பாலியல்புகார்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: 
காங்கேயம் நகராட்சியில் பல ஆண்டுகளாக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களாக 30 பெண் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
 தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சியின் ஆணையர் சில பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக செய்தித்துறை அமைச்சர், உள்ளாட்சி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், முதல் அமைச்சரின் தனிப்பிரிவு உள்பட பலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
இந்த புகார் அளிக்கப்பட்டதன் காரணமாக மேற்கண்ட ஊழியர்களுக்கு கடந்த 17ந் தேதி முதல் நகராட்சி ஆணையரால் பணி மறுக்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சி ஆணையர் மீதான பாலியல் சீண்டல் புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்