அந்தமானில் இருந்து சிகிச்சைக்காக வந்தவர்: சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி மயங்கி விழுந்து சாவு

அந்தமானில் இருந்து சிகிச்சைக்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2021-09-22 10:21 GMT
ஆலந்தூர்,

அந்தமானை சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மனைவி பாத்திமா (வயது 64). இவர் உடல்நலக்குறைவு காரணமாக கேரளாவில் சிகிச்சை பெற அந்தமானில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். இதற்காக அவர், சென்னையில் இருந்து கோவை சென்று அங்கிருந்து கேரளா செல்ல திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் கோவை செல்ல விமானத்தில் ஏறி செல்ல காத்திருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே விமான நிலைய மருத்துவ குழுவினர் ஓடி வந்து பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது பற்றி விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்