கும்மிடிப்பூண்டி அருகே விற்பனைக்காக காரில் கடத்தப்பட்ட 100 கிலோ குட்கா சிக்கியது - டிரைவர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே விற்பனைக்காக காரில் கடத்தப்பட்ட 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.;

Update: 2021-09-22 08:29 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நேற்று இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற சந்தேகத்திற்கு இடமான காரை அவர்கள் மடக்கி சோதனை செய்தனர். அந்த காரில் 100 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு விற்பனைக்காக கடத்தப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான ஆண்டார் குப்பத்தை சேர்ந்த சிவா (வயது 38) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்