சோழவந்தான்
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லூ ஆலோசனையின் பேரில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விக்கிரமங்கலம் பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கழுவாயி என்ற சித்ராதேவி (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் நடுமுதலைக்குளம் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது பஸ் நிலையம் மற்றும் கடையில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த பால்பாண்டி(24), ராஜாங்கம் (69) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.