கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உள்ளிட்ட பொருட்கள் வேலூர் கோர்ட்டில் ஒப்படைப்பு
கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உள்ளிட்ட பொருட்கள் வேலூர் கோர்ட்டில் ஒப்படைப்பு
வேலூர்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கே.சி.வீரமணியின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் கடந்த 16-ந் தேதி சோதனை நடத்தினர். சோதனையில் தங்க நகைகள், பணம், செல்போன், லேப்டாப், ஹாட்டிஸ்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்கள், ஹாட்டிஸ்க்குகள், மற்றும் பென்ட்ரைவ் மற்றும் ரூ.20 லட்சம் போன்றவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஆனால் நகைகளை ஒப்படைக்கவில்லை என்றும் அதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.