மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி

பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-09-21 15:12 GMT
பெரியகுளம்:

வடுகபட்டி பேரூராட்சி

பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படியும், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முத்துக்குமார் அறிவுரையின் பேரிலும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி நடந்தது. இந்த பணியை, பேரூராட்சி செயல் அலுவலர் அம்புஜம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 இதேபோல் நெடுஞ்சாலை துறை சார்பில் ஆண்டிப்பட்டி பகுதியில் வாய்க்கால் மற்றும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி நேற்று முதல் தொடங்கியது. இந்த பணியை, மகாராஜன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொக்லைன் எந்திரம் மூலம் ஆண்டிப்பட்டி வைகை அணை சாலை, சக்கம்பட்டி, பாப்பம்மாள்புரம், ஏத்தக்கோவில் சாலை உள்ளிட்ட இடங்களில் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. 

பெரியகுளம் நகராட்சி

நெடுஞ்சாலையோர வாய்க்கால்களில் தொடர்ந்து பல மாதங்களாக தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் இப்பணி வேகமாக நடைபெறுகிறது. நெடுஞ்சாலைத்துறையின் ஆண்டிப்பட்டி உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன், உதவி பொறியாளர் முத்துராம், சாலை ஆய்வாளர்கள் சிவப்பிரதா, சரஸ்வதி ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பணிகளை ஆய்வு செய்து துரிதப்படுத்தினர்.

பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்குள்ள அனைத்து வார்டுகளிலும் மழைநீர் வடிகாலை தூய்மைப்படுத்தும் முகாம் நடந்தது. நகராட்சி 1-வது வார்டு வைத்தியநாதபுரத்தில் நடந்த முகாமுக்கு, பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். 

முகாமில் நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு, சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, மாரிமுத்து, நகர தி.மு.க. செயலாளர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி வருகிற 25&ந்தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்