மகாத்மாகாந்தி திண்டுக்கல்லுக்கு வந்து 100 ஆண்டுகள் நிறைவு
மகாத்மா காந்தி திண்டுக்கல்லுக்கு வந்து 100 ஆண்டுகள் நிறைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
சுதந்திர காற்றை நாம் சுவாசிக்க காரணமானவர்களில் மகாத்மாகாந்தி முக்கியமானவர். பீரங்கி, துப்பாக்கியால் அடக்குமுறையை கையாண்ட ஆங்கிலேயர்களை, அகிம்சையால் திகைக்க வைத்தவர் மகாத்மாகாந்தி. சுதந்திர தாகத்தை மக்களிடம் ஏற்படுத்த நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்தார்.
அதன்படி மகாத்மாகாந்தி தமிழகத்துக்கும் பலமுறை வந்து இருக்கிறார். அதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்துக்கும் அவர் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மகாத்மாகாந்தி திண்டுக்கல்லுக்கு வந்து சென்ற 100 ஆண்டுகள் நிறைவு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதேபோல் காந்திய உணர்வாளர்களும் திரளாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.