மத்திய அரசை கண்டித்து தி.மு.க.- கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் - 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
மத்திய அரசை கண்டித்து தி.மு.க.- கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ.க்கள. பன்னீர்செல்வம், ராஜகுமார், நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் தி.மு.க. அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார் கலந்து கொண்டார்.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கியாஸ் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பபப்பட்டன.
இதில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், நகர துணைச் செயலாளர்கள் தெய்வநாயகம், ஆர்.கே.சங்கர், சின்ன மாரியப்பன், நிர்வாகிகள் பிரபா, வினோத்ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல கச்சேரி சாலையில் உள்ள பொதுதொழிலாளர் அலுவலகம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வக்கீல் வேலுகுணவேந்தன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், தி.மு.க. நிர்வாகிகள் இளஞ்செழியன், அப்பர்சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
சீர்காழி தென்பாதியில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வீட்டின் முன்பு மத்திய பாஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தி.மு.க.வை சேர்ந்த மிசா குமாரசாமி, நகர துணை செயலாளர் பாஸ்கரன், நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன், மாவட்ட நிர்வாகிகள் செல்வ முத்துக்குமார், தனராஜ், முருகன், அன்பழகன், இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் பேரூர் கழக செயலாளர் அன்புச் செழியன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ்சாண்டர், பேரூர் கழக நிர்வாகிகள் சுவாமிநாதன், சுந்தரமூர்த்தி, கமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் கே.பி.எஸ்.எம். கனிவண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
குத்தாலம் கடைவீதியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. பேரூர் செயலாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல குத்தாலம் ராஜகோபாலபுரம், தேரடி, மேலச்சாலை, தி.மு.க. ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து திருவெண்காட்டில் ஒன்றிய தி.மு.க. அலுவலகம் முன்பு சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான சசிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், பூம்புகார் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவல்லி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் துரைராஜன், கட்சி நிர்வாகிகள் அகோரம், சேரலாதன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மடத்தில் மத்திய அரசை கண்டித்து முன்னாள் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் ரவி தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் கீழசட்டநாதபுரம் பகுதியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நெடுஞ்செழியன் தலைமையில் தி.மு.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காத்திருப்பு பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி, கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பூம்புகாரில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. அருகே தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் அப்துல் மாலிக், நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், தரங்கை நகர செயலாளர் வெற்றிவேல் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா.
இதேபோல் செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க.கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கொள்ளிடம் ஒன்றியம் புதுப்பட்டினம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் புதுப்பட்டினம் வர்த்தக சங்கத் தலைவர் குபேந்திரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஆளவந்தார், நிர்வாகிகள் மாற்றம் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நல்லநாயகபுரம் கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொள்ளிடம் கடைவீதியில் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாண்டவன்குளம் ஊராட்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் கவிதா தர்மலிங்கம் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.