தூத்துக்குடியில் குட்டையில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

தூத்துக்குடியில் குட்டையில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

Update: 2021-09-21 13:37 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல் நகர்& கோக்கூர் இடையே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இந்த தண்ணீர் கடந்த ஓராண்டாக வடியாமல் அப்படியே நிற்கிறது. இந்த தண்ணீரில் ஏராளமான மீன்களும் காணப்பட்டன. ஓராண்டாக தேங்கி நிற்கும் இந்த தண்ணீரில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் சேர்ந்து மாசடைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் குட்டையில் காணப்பட்ட ஏராளமான மீன்கள் நேற்று காலை திடீரென செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. அந்த குட்டைக்கு அருகே அங்கன்வாடி மையம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே இறந்த மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்