தூத்துக்குடி மாவட்ட சுதுரங்க போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு

தூத்துக்குடி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கினார்

Update: 2021-09-21 13:21 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்தது. இப்போட்டிகள் 9, 11, 13, 15, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு மற்றும் பொதுப்பிரிவு ஆகிய 6 பிரிவுகளாக நடந்தது. போட்டியில் சர்வதேச நடுவர் ஆனந்தராம் நடுவராக பணியாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் சோமு தலைமை தாங்கினார். பொருளாளர் முத்துசெல்வம், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக தலவைர் ஜோ பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், விளையாட்டுப்போட்டி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். தற்போது மாணவ&மாணவிகளான உங்களுக்கு கல்வி ஒன்று தான் குறிக்கோளாக இருக்க வேண்டும். கல்வியோடு இணைந்த விளையாட்டு உங்களை சிறப்பானவர்களாக மாற்றும். அதேபோன்று நாமும் நம் வாழ்க்கையில் கல்வி, ஒழுக்கம், நற்பண்புகள் போன்ற விதிமுறைகளை கடைபிடித்தால் தான் வருங்காலத்தில் சாதனையாளர்களாக திகழ முடியும் என்றார்.
விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேன்ராஜ், ஆனந்த கண்ணன், சுபகுமார், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள் மற்றும் போலீசார், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்