வானரமுட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

வானரமுட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது;

Update:2021-09-21 17:32 IST
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில் 1996&98&ல் படித்த மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கிரேனா ராஜாத்தி தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் பேராசிரியர்கள் முனியசாமி, கனகசபை, கலைச்செல்வி, நல்லாசிரியர் விருது பெற்ற சுரேஷ்குமார், ஆசிரியர்கள் ஜோசப், ஜெபராஜ், காந்தராஜ், ரமேஷ், ஜான் பாரதிராஜா மற்றும் பலர் பேசினர். முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விஜயகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்